உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  மாற்றுத் திறனாளிகளுக்கு நியமன ஆணை வழங்கல்

 மாற்றுத் திறனாளிகளுக்கு நியமன ஆணை வழங்கல்

செஞ்சி: கிராம ஊராட்சிகளில் வார்டு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ள மாற் றுத் திறனாளிகளுக்கான நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி செஞ்சியில் நடந்தது. செஞ்சி ஒன்றியத்தை சேர்ந்த 60 ஊராட்சிகளில் தமிழக அரசின் உத்தரவுப்படி மாற்றுத் திறனாளி ஒருவரை அரசு மூலம் வார்டு உறுப்பினராக நியமனம் செய்துள்ளனர். இவர்களுக்கான ஆணை வழங்கும் நிகழ்ச்சி செஞ்சி ஒன்றிய அலுவலகத்தில் நடந்தது. ஒன்றிய சேர்மன் விஜய குமார் தலைமை தாங்கினார். பேரூராட்சி சேர்மன் மொக்தியார் அலி முன்னிலை வகித்தார். பி.டி.ஓ., நடராஜன் வரவேற்றார். மஸ்தான் எம்.எல்.ஏ., நியமன ஆணைகளை வழங்கி பேசினார். நிகழ்ச்சியில் துணை சேர்மன் ஜெயபாலன், மாவட்ட கவுன்சிலர்கள் அரங்க ஏழுமலை, அகிலா பார்த்திபன், ஒன்றிய செயலாளர் பச்சையப்பன், மேலாளர்கள் சுந்தரபாண்டியன், சசிகலா, ஊராட்சி தலைவர்கள் சங்க தலைவர் ரவி, ஊராட்சி தலைவர் தாட்சாயணி கார்த்திகேயன் மற்றும் ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி தலைவர்கள், தி.மு.க., நிர்வாகிகள் பங்கேற்றனர். கிராம ஊராட்சி பி.டி.ஓ., பிரபாசங்கர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை