உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மாணவர்களுக்கு கராத்தே சான்றிதழ் வழங்கல்

மாணவர்களுக்கு கராத்தே சான்றிதழ் வழங்கல்

திண்டிவனம் : கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற சாணக்யா பள்ளி மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. புதுச்சேரி ராஜிவ்காந்தி உள்விளையாட்டு அரங்கத்தில், அகில இந்திய கராத்தே போட்டிகள் நடந்தது. இதில் பங்கேற்ற திண்டிவனம் சாணக்யா மெட்ரிக் மேல்நிலைபள்ளி மாணவர்கள் 44 புள்ளிகள் எடுத்து ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை வெற்றனர். போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளியின் தாளாளர் தேவராஜ் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.இதில் பள்ளியின் துணை தலைவர் வேல்முருகன், பள்ளி முதல்வர் அருள்மொழி, கராத்தே பயிற்சி ஆசிரியர்கள் இளங்கோவன், சங்கவி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். ஆசிரியர் இருசன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை