விழுப்புரம், : விழுப்புரம் வழுதரெட்டியில், முன்னாள் முதல்வர் ஜெ.,வின் 76வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.விழாவிற்கு, அ.தி.மு.க., மாவட்ட வர்த்தக அணி இணைச்செயலாளர் செந்தில்வேலன் தலைமை தாங்கினார். முன்னாள் ஊராட்சி தலைவர் ராயர், மாவட்ட ஜெ.,பேரவை துணைச் செயலாளர் திருப்பதி பாலாஜி, ஆகியோர் முன்னிலை வகித்தனர். வார்டு செயலாளர் நாராயணன் வரவேற்றார்.விழுப்புரம் தெற்கு நகர செயலாளர் பசுபதி ஜெ., படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின், ஏழை, எளிய மக்கள் 300 பேருக்கு வேட்டி, சேலை மற்றும் அன்னதானம் வழங்கினார். நிகழ்ச்சியில், மாவட்ட பாசறை இணைச் செயலாளர் வினித், நகர பேரவை இணைச் செயலாளர் கோவிந்தன், அண்ணா தொழிற்சங்க செயலாளர் அய்யனார், துணைச் செயலாளர் தயாளன், நகர இளைஞரணி இணைச் செயலாளர் சதீஷ்குமார், பொருளாளர் சாந்தகுமார், பேரவை நிர்வாகி பதி என்ற நாகராஜன்.மாவட்ட விவசாய அணி நிர்வாகி காகுப்பம் கார்த்திகேயன், வார்டு நிர்வாகி சதீஷ், அவைத்தலைவர் காசிநாதன், எம்.ஜி.ஆர்., மன்ற நிர்வாகிகள் தென்னமாதேவி அறிவுக்கரசு, அங்கு, கணேசன், வார்டு இணைச்செயலாளர் பாரதி, நிர்வாகிகள் திலீப், விக்கி, கலா, மகேஸ்வரி உட்பட பலர் பங்கேற்றனர்.