உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ஜாக்டோ ஜியோ போராட்டம்: விழுப்புரத்தில் 337 பேர் கைது

ஜாக்டோ ஜியோ போராட்டம்: விழுப்புரத்தில் 337 பேர் கைது

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில், நேற்று நடந்த ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு போராட்டத்தில் 40 சதவீதம் பேர் பங்கேற்றனர். மறியல் செய்த 337 பேர் கைது செய்யப்பட்டனர்.தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான பங்களிப்பு ஓய்வூதியத்தை கைவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அரசு அமல்படுத்த வேண்டும், ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளுக்கு தீர்வு காண வேண்டும், ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையாக ஊதியம் வழங்க வேண்டும், அரசு துறையில் தற்போதுள்ள 6 லட்சம் காலி பணியிடங்களை, காலமுறை ஊதியத்தில் பணியாளர்களை கொண்டு நிரப்பிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் இணைந்த ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று மாநிலம் தழுவிய மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் எதிரே காலை 10;30 மணிக்கு நடந்த போராட்டத்தில், கணேஷ் உள்ளிட்ட கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் தலைமையில், கோரிக்கைகளை வலியுறுத்தி பலர் மறியலில் ஈடுபட்டனர். விழுப்புரம் தாலுகா போலீசாரால், மறியலில் ஈடுபட்ட 222 ஆண்கள் மற்றும் 115 பெண்கள் என 337 பேர் கைது செய்யப்பட்டனர்.விழுப்புரம் மாவட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர், நேற்று ஒரு நாள் தற்செயல் விடுப்பு எடுத்து கலந்துகொண்டனர். இதனால், விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் மொத்தமுள்ள 107 பணியாளர்களில், நேற்று 42 பேர் ஆப்சென்ட் ஆகியிருந்தனர். இதே போல், மாவட்டம் முழுவதும் அரசு அலுவலகங்கள் மற்றும் அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள், ஊழியர்கள் 40 சதவீதம் பேர் பணிக்கு வராமல் போராட்டத்தில் பங்கேற்றதால், முக்கிய அரசு அலுவலகங்கள், அரசு பள்ளிகளில் முழு அளவில் ஊழியர்களின்றி வெறிச்சோடி பணிகள் பாதிக்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை