| ADDED : பிப் 04, 2024 04:50 AM
செஞ்சி : செஞ்சி அருகே 2 வீடுகளின் பூட்டை உடைத்து பணம், நகை திருடிய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.செஞ்சி அடுத்த குறிஞ்சிப்பை கிராமத்தைச் சேர்ந்தவர் தேவராஜ் மனைவி சுமதி 47; விவசாய கூலித் தொழிலாளி. இவர், நேற்று முன்தினம் காலை 8:00 மணிக்கு வேலைக்குச் சென்றார். 11:30 மணிக்கு திரும்பி வந்து பார்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே பீரோவில் இருந்த 30 ஆயிரம் ரூபாய், 1.60 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 32 கிராம் செயின் கொள்ளை போனது தெரியவந்தது. மேலும் ஒரு வழக்கு
பெருங்காப்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முனுசாமி மனைவி அமுதா, 55; இவர், நேற்று முன்தினம் காலை 11:00 மணிக்கு வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் நிலத்திற்குச் சென்றிருந்தார்.மதியம் 2:00 மணிக்கு வீடு திரும்பிய போது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த 2 லட்சம் ரூபாய், 1.50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 30 கிராம் நகைகள் கொள்ளை போனது தெரியவந்தது. இரு சம்பவங்கள் குறித்தும் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், செஞ்சி மற்றும் சத்தியமங்கலம் போலீசார் வழக்குப் பதிந்து மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.