மேலும் செய்திகள்
நண்பனின் தந்தையை வெட்டியவர் கைது
05-Aug-2025
விழுப்புரம்: கண்டமங்கலம் புதிய தாலுகா அமைத்திட அரசு துரித நடவடிக்கை எடுத்து வருவதாக, ஒன்றிய சேர்மன் வாசன் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கை : கண்டமங்கலம் ஒன்றியத்தில் உள்ள 46 ஊராட்சிகள், விழுப்புரம் மற்றும் விக்கிரவாண்டி தாலுகா பகுதியில் இடம்பெற்றுள்ளன. கண்டமங்கலம் மற்றும் பல்வேறு கிராம பகுதிகள் விழுப்புரம், விக்கிரவாண்டியில் இருந்து 30 கி.மீ., துாரத்தில் உள்ளன. இதனால் நிர்வாக சிரமத்தை போக்கும்வகையில், கண்டமங்கலத்தை புதிய தாலுகாவாக பிரிக்குமாறு பொதுமக்கள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். கடந்த 2023ம் ஆண்டு மார்ச் மாதம் அரசிற்கு, அதிகாரிகள் தரப்பில் கோப்புகள் அனுப்பி வைக்கப்பட்டன. இதற்கிடையே, கண்டமங்கலத்தை தலைமையிடமாகக் கொண்டு தாலுகா உருவாக்கிட துரித நடவடிக்கை எடுக்குமாறு, தமிழக முதல்வருக்கு ஒன்றிய சேர்மன் என்கிற அடிப்படையில் கோரிக்கை விடுத்தேன். வருவாய்த்துறை அமைச்சர், மாவட்ட பொறுப்பு அமைச்சர் ஆகியோரிடம் நேரில் வலியுறுத்தினேன். கோரிக்கை மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படுதாக அமைச்சர்கள் உறுதியளித்தனர். இந்நிலையில், இந்த கோரிக்கை மீது அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருவதாக, அரசின் கூடுதல் தலைமை செயலாளர் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையர், கடிதம் அனுப்பியுள்ளார். முதல்வர் ஒப்புதல் கிடைத்ததும், கண்டமங்கலம் புதிய தாலுகா விரைவில் உருவாக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
05-Aug-2025