உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கண்டமங்கலம் பி.டி.ஒ., அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு

கண்டமங்கலம் பி.டி.ஒ., அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு

கண்டமங்கலம்; கண்டமங்கலம் பி.டி.ஓ., அலுவலகத்தை முற்றுகையிட்டு, நேற்று ரஜபுத்திரபாளையம் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.கண்டமங்கலம் ஒன்றியம் பெரியபாபுசமுத்திரம் ஊராட்சிக்குட்பட்ட ரஜபுத்திரபாளையம் கிராம மக்கள் நேற்று முன்தினம் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டப் பணியில் ஈடுபட்டுள்ளனர். காலை 11.00 மணிக்கு பணியை மேற்பார்வையிட வந்த கண்டமங்கலம் பி.டி.ஓ., அலுவலக ஓவர்சியர் பணியில் ஈடுபட்டிருந்த மக்களை தரக்குறைவாக பேசியுள்ளார்.இதனைக் கண்டித்தும், சம்பந்தப்பட்ட அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் மா.கம்யூ., கிளை செயலாளர் ரங்கதுரை தலைமையில் ரஜபுத்திரபாளையம் கிராம பெண்கள் நேற்று கண்டமங்கலம் பி.டி.ஓ., அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.அவர்களிடம் துணை பி.டி.ஓ., உமா பேச்சுவார்த்தை நடத்தினர். பி.டி.ஓ.,க்கள் இருவரும், அலுவலக வேலையாக விழுப்புரம் சென்றுள்ளனர். அவர்கள் வந்த பின்பு உரிய விசாரணை நடத்தி, நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்தனர். இதையடுத்து கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்துசென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை