| ADDED : ஜன 12, 2024 12:07 AM
வானுார்: விழுப்புரம் மாவட்ட ஹிந்துஸ்தான் கராத்தே டோ பெடரேஷன் கிளை கராத்தே பயிற்சி பள்ளி சார்பில், திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் ஒருநாள் கராத்தே பயிற்சி முகாம் நடந்தது.முகாமில் நுாற்றுக்கணக்கான மாணவ, மாணவியர்கள் பங்கேற்று திறமையை வெளிப்படுத்தினர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கும் விழா நடந்தது.பெடரேஷன் மாநிலத் தலைவர் மூர்த்தி, பொறுப்பாளர் கியோஷி முத்துகுமரன், ஷிகான் சுந்தர்ராஜன் முன்னிலை வகித்தனர்.ஹிந்துஸ்தான் கராத்தே டோ பெடரேஷன் நிறுவனர் வெற்றிவேல் தலைமை தாங்கினார். அகில இந்திய காரத்தே சம்மேளன துணைத் தலைவர் வளவன், மக்கள் சட்ட உரிமைக் கழக நிறுவனர் ஜெயபாலன், பொதுச்செயலாளர் வெற்றிகொண்டான், நிர்வாகத் தலைமை செயலாளர் பிரியா கிருஷ்ணன், மாவட்ட செயலாளர் ஆனந்தராஜ் ஆகியோர் மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினர்.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விழுப்புரம் மாவட்ட கராத்தே பயிற்சி பள்ளியின் தலைமை பயிற்சியாளர் சூர்யா மற்றும் பயிற்சியாளர்கள், பிளாக் பெல்ட் மாணவர்கள் செய்திருந்தனர்.