உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / 6 கோவில்களில் கும்பாபிேஷகம்

6 கோவில்களில் கும்பாபிேஷகம்

விக்கிரவாண்டி, : விக்கிரவாண்டி அடுத்த உலகலாம்பூண்டியில் 6 கோவில்களில் கும்பாபிேஷகம் நடந்தது.உலகலாம்பூண்டியில் விநாயகர், வள்ளி தெய்வானை சமேத சுப்ரமணிய சுவாமி, திரவுபதி அம்மன், முத்து மாரியம்மன், அய்யனாரப்பன், பிடாரியம்மன் ஆகிய 6 கோவிகள் கிராம பொதுமக்களால் புதுப்பிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, நேற்று கோவில்களுக்கு கும்பாபிபேஷக விழா நடந்தது.விழாவையொட்டி, நேற்று முன்தினம் காலை 10:00 மணிக்கு கணபதி ேஹாமத்துடன் யாக சாலை பூஜை துவங்கியது. நேற்று காலை 9:00 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜை முடிந்து கடம் புறப்பாடாகி 9:35 மணிக்கு அனைத்து கோவில் கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிேஷகம் நடந்தது.யாகசாலை மற்றும் பூஜைகளை வேப்பூர் தங்கதுரை தலைமையில் சிவாச்சாரியார்கள் செய்திருந்தனர். உலகலாம்பூண்டி மற்றும் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் திரளாக பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை திருப்பணிக் குழுவினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ