உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பெரியாயி அம்மன் கோவில் 30ம் தேதி கும்பாபிஷேகம்

பெரியாயி அம்மன் கோவில் 30ம் தேதி கும்பாபிஷேகம்

செஞ்சி: செஞ்சி, சிறுகடம்பூர் பெரியாண்டவர், பெரியாயி அம்மன், அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் திருப்பணிகள் முடிந்து அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் வரும் 30ம் தேதி நடக்கிறது.அதனையொட்டி, நாளை (29ம் தேதி) மாலை 4:00 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, கணபதி, நவக்கிரஹ, லட்சுமி ஹோமம், கோ பூஜையும், மாலை 5:00 மணிக்கு வாஸ்த்து சாந்தி, பிரவேச பலி, கும்ப அலங்காரம், கலச ஸ்தாபனம், யாகசாலை பிரவேசம், முதல் கால யாகசாலை பூஜை நடக்கிறது.வரும் 30ம் தேதி காலை 7:30 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜை, நாடி சந்தானம், யாத்ராதானமும், 9:00 மணிக்கு கடம் புறப்பாடும், 10:00 மணிக்கு பெரியாண்டவர், பெரியாயி, அங்காளம்மன் கோவில் கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடக்கிறது.விழா ஏற்பாடுகளை சிறுகடம்பூர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை