வாசகர்கள் கருத்துகள் ( 1 )
Sri Rama Jayam Sri Rama Jayam Sri Rama Jayam
விழுப்புரம்: விழுப்புரம் ஆஞ்சநேயர் கோவிலில் 101வது ஆண்டு லட்ச தீப மகோற்சவ பெருவிழா நேற்று துவங்கியது. விழுப்புரம் ஆஞ்சநேயர் கோவிலில் இந்தாண்டு லட்சத்தீப பெருவிழா முதல் நாள் திருவிழா நேற்று காலை கணபதி பூஜையுடன் துவங்கியது. மூலவர் ஆஞ்சநேயருக்கு காலை 7.00 மணி முதல் சிறப்பு வழிபாடு நடந்தது. மூலவர் வெள்ளி காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இரவு எலக்ட்ரிக் விமான வாகனத்தில் உற்சவர் ஆஞ்சநேயர் சிறப்பு மலர் அலங்காரத்தில் வீதியுலா நடந்தது.தொடர்ந்து தினசரி உற்சவம் நடக்கிறது. வரும் 14ம் தேதி, முக்கிய விழாவான சித்திரை 1ம் தேதி ஸ்ரீ விசுவாவசு தமிழ் ஆண்டு பிறப்பையொட்டி, லட்ச தீப பெருவிழா நடக்கிறது. காலை 6.00 மணி முதல் இரவு 8.30 மணி வரை திரளான பக்தர்கள், கோவில் குளக்கரையில் லட்சதீபம் ஏற்றி வழிபடுகின்றனர்.தொடர்ந்து தினசரி உற்சவமும், இரவு சுவாமி வீதியுலாவும் நடக்கிறது. வரும் 19ம் தேதி சனிக்கிழமை, 10ம் நாள் திருவிழாவாக, கோவில் தெப்பல் குளத்தில் பிரசித்தி பெற்ற தெப்பல் உற்சவம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை, கோவில் அறங்காவலர் குமார் தலைமையில், விழா குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர்.இத்திருவிழா ஏப்.10ம் தேதி தொடங்கி 20ம் தேதி வரை நடக்கிறது. தினசரி மாலை 6.30 மணியிலிருந்து, இரவு 10.00 மணி வரை, கோவில் வளாகத்தில் கலை நிகழ்ச்சிகளும், ஆன்மிக சொற்பொழிவுகளும், சுவாமி வீதி உலாவும் நடக்கிறது.
Sri Rama Jayam Sri Rama Jayam Sri Rama Jayam