| ADDED : ஜன 20, 2024 12:54 AM
திருவெண்ணெய்நல்லுார்:விழுப்புரம், கீழ்பெரும்பாக்கத்தை சேர்ந்தவர் சவுந்தர்ராஜன், 52; திருவெண்ணெய்நல்லுார் போலீஸ் ஸ்டேஷன் சிறப்பு உதவி ஆய்வாளர். திருவெண்ணெய்நல்லுார் கள்ளுக்கடை சந்திப்பு அருகே ரோந்து சென்றபோது, மது போதையில் இருந்த வாலிபர், போலீசாரிடம் வாக்குவாதம் செய்து, சவுந்தர்ராஜனை தாக்கினார். தடுக்க முயன்ற பெண் தலைமை காவலர் வரலட்சுமியையும் தாக்கினார்.போலீசார், அவரைப் பிடித்து விசாரித்ததில், திருவெண்ணெய்நல்லுார், காந்திநகர் செந்தில்குமார், 32, விழுப்புரம் சட்டக் கல்லுாரி மாணவர் என்பது தெரிந்தது. சவுந்தர்ராஜன் கொடுத்த புகார்படி, அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தல், பெண்ணை தாக்கியது உள்ளிட்ட ஆறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து, செந்தில்குமாரை போலீசார் கைது செய்தனர்.