உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / வழக்கறிஞர்கள் சாலை மறியல்; எஸ்.பி., பேச்சுவார்த்தையில் சுமூகம்

வழக்கறிஞர்கள் சாலை மறியல்; எஸ்.பி., பேச்சுவார்த்தையில் சுமூகம்

செஞ்சி : போலீசை கண்டித்து வழக்கறிஞர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.வளத்தி காவல் நிலையத்தில் வழக்கறிஞர் தனது கட்சிகாரர் சார்பில் புகார் கொடுக்கச் சென்றபோது, அங்கு பணியில் இருந்த சப் இன்ஸ்பெக்டருடன் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இது குறித்து இரு தரப்பினரும் புகார் செய்தனர். புகார்கள் மீது நேற்று போலீசார் வழக்குப் பதிவு செய்ய முடிவு செய்தனர்.இந்நிலையில், வழக்கறிஞர் கொடுத்த புகாரின் பிரிவுகளை குறைத்து வழக்கு பதிந்ததாக வழக்கறிஞர்கள் மீது வழக்கு பதிந்ததை கண்டித்து மதியம் 12:00 மணியளவில் பார் அசோசியேஷன் தலைவர் சக்திராஜன், வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் தர்மலிங்கம் தலைமையில் கோர்ட் வளாகம் எதிரே செஞ்சி - திண்டிவனம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.தகவலறிந்து வந்த இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி மற்றும் போலீசார் எஸ்.பி., முன்னிலையில் பேச்சு வார்த்தை நடத்தலாம் என சமாதானம் பேசியதைத் தொடர்ந்து 12:15 மணிக்கு மறியலை கைவிட்டனர். அதனைத் தொடர்ந்து பிற்பகல் 2:00 மணியளவில் எஸ்.பி., சசாங்சாய் முன்னிலையில் பேச்சு வார்த்தை நடந்தது.அதில் சம்மந்தப்பட்ட சப் இன்ஸ்பெக்டர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுப்பதாக எஸ்.பி., உறுதி யளித்தார். இதையேற்று வழக்கறிஞர்கள் சமாதானமடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்