மேலும் செய்திகள்
உரம், வற்றல் தயாரிக்க பயிற்சி
25-Mar-2025
செஞ்சி: ஊரணிதாங்கலில் பெண்களுக்கு தோல் பொருள் தயாரிப்பு பயிற்சி முகாம் நடந்தது.செஞ்சி அடுத்த ஊரணிதாங்கல் கிராம சேவை மைய கட்டடத்தில் சென்னை, கிண்டியில் உள்ள மத்திய காலனி பயிற்சி நிறுவனம் சார்பில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின பெண்களுக்கான தோல் பொருள் தயாரிப்பு பயிற்சி முகாம் நடந்தது.ஊராட்சி தலைவர் சாரதா ஏழுமலை வரவேற்றார். பி.டி.ஓ.,க்கள் நடராஜன், பிரபா சங்கர் முன்னிலை வகித்தனர்.செஞ்சி ஒன்றிய சேர்மேன் விஜயகுமார் முகாமை துவங்கி வைத்தார். பயிற்சியாளர் சந்திரசேகர் பயிற்சி அளித்தார். 35 மகளிர்கள் பயிற்சி பெற்றனர். 38 நாட்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமில் தோல் பொருட்கள் மூலம் ஹேண்ட் பேக், பர்ஸ், ஐ.டி., கார்டு உள்ளிட்ட பொருட்கள் செய்வதற்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.
25-Mar-2025