| ADDED : ஜன 08, 2024 05:11 AM
விழுப்புரம்;விழுப்புரம் அரசு கலைக் கல்லுாரியில், மாவட்ட காவல்துறை சார்பில் கல்லுாரி மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.கல்லுாரி முதல்வர் சிவக்குமார் வரவேற்றார். விழுப்புரம் டி.எஸ்.பி., சுரேஷ் மாணவர்களிடையே சட்டம் சார்ந்த விழிப்புணர்வு கருத்துகளை வழங்கினார்.அப்போது, மாணவர்கள் எவ்வாறு சிகை அலங்காரம் மற்றும் சீராக உடையை அணிந்து வர வேண்டும். ஒழுக்கம் தவறாமல் இருக்க வேண்டும், நன்கு படித்து, போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ளும் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும்.மாணவர்கள் போதைப் பழக்கத்திற்கு அடிமையாகாமல், சமுதாய பொறுப்பை உணர்ந்து, தங்கள் கடமையை செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் பங்கேற்றனர்.வேதியியல் துறைத் தலைவர் பூபதி நன்றி கூறினார்.