உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  செல்ல பிராணிகளுக்கு லைசென்ஸ் கட்டாயம் : செயல் அலுவலர் அறிவிப்பு

 செல்ல பிராணிகளுக்கு லைசென்ஸ் கட்டாயம் : செயல் அலுவலர் அறிவிப்பு

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி பேரூராட்சியில் செல்ல பிராணிகளுக்கு லைசென்ஸ் கட்டாயம் பெற வேண்டும் என செயல் அலுவலர் தெரிவித்துள்ளார். விக்கிரவாண்டி பேரூராட்சி செயல் அலுவலர் ஷேக் லத்தீப் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: உச்ச நீதிமன்றம் வழிகாட்டுதலின் பேரில் பேரூராட்சி பகுதியில் பொதுமக்கள் அதிகம் கூடுகின்ற இடமான மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள், வட்டாட்சியர், ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், பஸ் நிலையம் உள்ளிட்ட அரசு நிறுவனங்களில் சுற்றித் திரியும் தெரு நாய்களை கட்டுப்படுத்தும் பொருட்டு ஒருங்கிணைப்பு அலுவலர் ஒருவரை நியமித்து தகவலை தெரிவிக்க வேண்டும். உள்ளூர் காவல்துறை, மாவட்ட கட்டுப்பாட்டு அறை ஆகியவற்றின் தொலைபேசி எண்கள் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் தாங்கள் வளர்க்கும் செல்ல பிராணிகளுக்கு தடுப்பூசி செலுத்தியும், கருத்தடை செய்தும் தக்க ஆதாரத்தோடு பேரூராட்சி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்து கட்டாயம் லைசென்ஸ் பெற்றுக் கொள்ள வேண்டும். இவ்வாறு செயல் அலுவலர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை