உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / காதலியை கொலை செய்த காதலனுக்கு ஆயுள்

காதலியை கொலை செய்த காதலனுக்கு ஆயுள்

விழுப்புரம் : செஞ்சி கோட்டையில் காதலியை பலாத்காரம் செய்து கொலை செய்த காதலனுக்கு ஆயுள் தண்டனை விதித்து விழுப்புரம் கோர்ட்டில் தீர்ப்பு வழங்கப்பட்டது.செஞ்சி, மலைக்கோட்டையில் கடந்த 2016ம் ஆண்டு ஜூலை 23ம் தேதி பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடந்தார். செஞ்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர்.அதில், கிடைத்த தகவலின் பேரில் புதுச்சேரி ஜெயகணேஷ் நகர், களத்துமேடு பகுதியை சேர்ந்த அரிகிருஷ்ணன் மகன் விஜி,34;யை பிடித்து விசாரித்தனர்.அதில், கொலை செய்யப்பட்ட பெண் கோட்டக்குப்பத்தை சேர்ந்த ரிஹானபர்வீன்,27; என்பதும், இவரும், விஜியும் காதலித்து வந்தனர். விஜி திருமணம் செய்து கொள்வதாக கூறி ரிஹானபர்வீனை செஞ்சி மலைக்கோட்டைக்கு அழைத்து சென்று பலாத்காரம் செய்துவிட்டு கொலை செய்தது தெரிய வந்தது.அதன்பேரில் விஜியை கைது செய்த போலீசார், அவர் மீது விழுப்புரம் மகிளிர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் சங்கீதா ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி ெஹர்மிஸ், குற்றம் சாற்றப்பட்ட விஜிக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ. 15 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி