மேலும் செய்திகள்
பைக்குகள் மோதி விபத்து; டாஸ்மாக் ஊழியர் பலி
07-Apr-2025
மயிலம்: மயிலம் அருகே கூட்டேரிப்பட்டில் லாட்டரி சீட்டு விற்ற இருவரை போலீசார் கைது செய்தனர்.மயிலம் அருகில் உள்ள கொடிமா கிராமத்தை சேர்ந்தவர் காளிதாஸ், 51; திருவேங்கடம், 65; இருவரும் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை செய்வதாக தகவல் கிடைத்தது. திண்டிவனம் டி.எஸ்.பி. தனிபடை போலீசார் இருவரையும் மடக்கி பிடித்து விசாரித்தனர். இருவரும் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்வது தெரியவந்தது.மயிலம் போலீசார் இருவரையும் கைது செய்து, பைக், 3 மொபைல்போன்களை பறிமுதல் செய்தனர்.
07-Apr-2025