உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / குட்கா விற்பனை செய்த ஒருவர் கைது 

குட்கா விற்பனை செய்த ஒருவர் கைது 

விக்கிரவாண்டி: பெரிய தச்சூர் அருகே குட்கா விற்ற கடைக்காரரை போலீசார் கைது செய்தனர். பெரிய தச்சூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் விவேகானந்தன் மற்றும் போலீசார் நேற்று ஆலகிராமம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது அங்குள்ள மளிகை கடையில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பது தெரியவந்தது. போலீசார் கடையை சோதனை செய்து அங்கிருந்து, 4 கிலோ குட்காவை பறிமுதல் செய்தனர். கடைக்காரர் ஆலகிராமத்தைச் சேர்ந்த தனபால் மகன் ராமமூர்த்தி,46 என்பவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ