உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ரேஷன் அரிசி கடத்திய ஆசாமி கைது

ரேஷன் அரிசி கடத்திய ஆசாமி கைது

விழுப்புரம் : திருவெண்ணெய்நல்லுார் அருகே 1,200 கிலோ ரேஷன் அரிசி கடத்திய வேலுார் ஆசாமியை போலீசார் கைது செய்தனர். திருவெண்ணெய்நல்லுார் அருகே பேரங்கியூர் கிராமத்தில் ரேஷன் அரிசி பதுக்கி கடத்துவதாக, நேற்று முன்தினம் விழுப்புரம் குடிமை பொருள் குற்றப்புலனாய்வு துறை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில், போலீசார் சோதனை செய்ததில், பேரங்கியூர் கிராமத்தில் உள்ள சமுதாய கூடம் அருகே 50 கிலோ கொண்ட 24 மூட்டைகளில், 1,200 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். இதை பதுக்கிய காட்பாடி வேலுார், சஞ்சீவிராயபுரம் பகுதியை சேர்ந்த ஜெகநாதன்,46; என்பவரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில், அவர் தான் வளர்க்கும் வாத்துகளுக்கு தேவையான உணவிற்காக ரேஷன் அரிசி வாங்கியது தெரியவந்தது. தொடர்ந்து, போலீசார் அவரிடம் இருந்த ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி