ரயில் பயணியிடம் மொபைல் போன் திருடியவர் கைது
விழுப்புரம்: விழுப்புரத்தில் ரயில் பயணியிடம் மொபைல்போனை திருடிய கேரள மாநில முதியவர் கைது செய்யப்பட்டார்.கர்நாடகா மாநிலம், பெங்களுரூ அடுத்த குருபரஹள்ளி பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் மகன் ஹேமந்த், 21; தனியார் நிறுவன ஊழியர். இவர், நேற்று ரயில் மூலம் ஊருக்கு செல்வதற்காக மதியம் 1.00 மணிக்கு, விழுப்புரம் ரயில் நிலையத்தின் முதல் பிளாட்பாரத்தில் உள்ள வெயிட்டிங் ஹாலில் காத்திருந்தார். அப்போது, அங்கு வந்த கேரள மாநிலம் கோழிக்கோடு அடுத்த நடக்காவு கிராமத்தை சேர்ந்த சசிதரகுருப்,76; என்பவர், ஹேமந்த்தின் பையிலிருந்த விலை உயர்ந்த சாம்சங் மொபைல்போனை திருடியுள்ளார். உடனே அங்கிருந்தவர்கள், கையும், களவுமாக பிடித்து முதியவரை போலீசில் ஒப்படை த்தனர்.விழுப்புரம் ரயில்வே போலீசார் வழக்கு பதிந்து, சசிதரகுருப்பை கைது செய்து, விழுப்புரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.