உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  ஐயப்பன் சன்னதியில் மண்டல பூஜை

 ஐயப்பன் சன்னதியில் மண்டல பூஜை

விழுப்புரம்: விழுப்புரம் அடுத்த பாணாம்பட்டு கிராமத்தில் உள்ள ஸ்ரீ நிமலய்யன் சன்னதியில் மண்டல பூஜை வழிபாடு நேற்று நடந்தது. அதனையொட்டி காலை 8:00 மணிக்கு விநாயகர் பூஜையுடன் தொடங்கி மூலவர் நிமலய்யனுக்கு மகா அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, காலை 11:00 மணிக்கு அஷ்டோத்திர சிறப்பு அர்ச்சனையும், ஆராதனையும் நடந்தது. குருசாமி நந்தகோபால் தலைமையில் தர்ம சாஸ்தா பஜனை குழுவினரின் ஐயப்ப சுவாமியின் சிறப்பு பஜனை வழிபாடு நடந்தது. மதியம் 1:00 மணிக்கு மூலவருக்கு மலர் அலங்காரம் செய்து, மகா தீபாரதனை நடந்தது. நிறைவாக அன்னதானம் வழங்கினர். ஐயப்ப பக்தர்கள், ஆன்மிக அன்பர்கள், பொது மக்கள் பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை