மணிமண்டபம் பணி: அமைச்சர் ஆய்வு
விழுப்புரம்: விழுப்புரம் அருகே கட்டப்பட்டுள்ள எல்லீஸ் அணை, தியாகிகள் மணிமண்டபத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளதாக, அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.விழுப்புரம், ஜானகிபுரத்தில், தமிழக அரசு சார்பில், முன்னாள் அமைச்சர் ஏ.கோவிந்தசாமிக்கு 4 கோடி ரூபாய் மதிப்பில் சிலையுடன் கூடிய நினைவு அரங்கமும், இடஒதுக்கீடு போராட்டத்தில் உயிர்நீத்தவர்களுக்கு 5.70 கோடி ரூபாய் மதிப்பில் சிலையுடன் கூடிய மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது.இம்மாத இறுதியில் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்க திட்டமிட்டுள்ளதால், அதற்கான பணிகளை அமைச்சர் பொன்முடி, கலெக்டர் பழனி மற்றும் அதிகாரிகள் நேற்று காலை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.பிறகு, ஏனாதிமங்கலம் தென்பெண்ணையாற்றில் கட்டப்பட்டுள்ள எல்லிஸ் அணைக்கட்டையும் பார்வையிட்டனர்.தொடர்ந்த அமைச்சர் பொன்முடி நிருபர்களிடம் கூறுகையில், 'விழுப்புரம், வழுதரெட்டியில், கோவிந்தசாமியின் சிலையுடன் கூடிய நினைவு அரங்கமும், இடஒதுக்கீடு போராட்டத்தில் உயிர்நீத்தவர்களுக்கு மணிமண்டபமும் கட்டப்பட்டுள்ளது. ஏனாதிமங்கலம் தென்பெண்ணை ஆற்றில் எல்லிஸ் அணைக்கட்டு பணியும் நிறைவு பெற்றுள்ளது.முதல்வர் ஸ்டாலின், விரைவில் விழுப்புரம் வருகை தந்து, இத்திட்டங்களை திறந்து வைக்கிறார்' என்றார்.முன்னாள் எம்.பி., கவுதமசிகாமணி, மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன், முன்னாள் சேர்மன் ஜனகராஜ், எஸ்.பி., தீபக்சிவாச், ஒன்றிய சேர்மன் ஓம்சிவசக்திவேல், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.