மனநலம் பாதித்தவர் தற்கொலை
விழுப்புரம் : விழுப்புரம் அருகே மனநலம் பாதித்தவர் தற்கொலை செய்துகொண்டார். தி.முத்தியால்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி மகன் பாலமுருகன், 46; திருமணமாகாதவர். கடந்த ஓராண்டாக மனநலம் பாதிக்கப்பட்டிருந்தார். கடந்த இரு தினங்களுக்கு முன், வீட்டில் தனியாக இருந்த அவர், மின் விசிறியில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.