உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கோட்டக்குப்பம் பகுதியில் நிவாரணம் அமைச்சர் பொன்முடி துவக்கி வைப்பு

கோட்டக்குப்பம் பகுதியில் நிவாரணம் அமைச்சர் பொன்முடி துவக்கி வைப்பு

கோட்டக்குப்பம், : கோட்டக்குப்பம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.கோட்டக்குப்பம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, அரசு சார்பில் 2,000 ரூபாயுடன் அரிசி, சக்கரை, துவரம் பருப்பு உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படுகிறது. இப்பணியை அமைச்சர் பொன்முடி வழங்கி துவக்கி வைத்தார்.தி.மு.க., மாவட்ட செயலாளர் கவுதம சிகாமணி, பொருளாளர் ஜனகராஜ், நகர மன்ற தலைவர் ஜெயமூர்த்தி, துணைத் தலைவர் ஜீனத் பீவி, வானுார் ஒன்றிய சேர்மன் உஷா, ஒன்றிய செயலாளர்கள் முரளி, மைதிலி, மாவட்ட மருத்துவர் அணி வினோபாரதி, மீனவர் அணி மணி, துணை அமைப்பாளர் வீரப்பன், சிறுபான்மை அணி அன்வர் பாஷா, கவுன்சிலர்கள் சுகுமார், நாசர் அலி , முகமது பாரூக் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை