உள்ளூர் செய்திகள்

அமைச்சர் ஆய்வு

அவலுார்பேட்டை : மேல்மலையனுார் அருகே பள்ளியில் காலை உணவு திட்டத்தின் உணவை சாப்பிட்டு அமைச்சர் மஸ்தான் ஆய்வு செய்தார்.மேல்மலையனுார் அடுத்த கொடுக்கன்குப்பம் கிராமத்தில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் நேற்று, காலை உணவு திட்டத்தில் மாணர்வகளுக்கு வழங்கப்படும் உணவினை சாப்பிட்டு அமைச்சர் மஸ்தான் ஆய்வு செய்தார்.தொடர்ந்து மாணவர்களுக்கு அவரே கையால் உணவு ஊட்டி மகிழ்ந்தார்.மேலும், மேல்மலையனுாரில் கட்டப்பட்டு வரும் கழிவு நீர் கால்வாய் , சிமென்ட் சாலை பணிகளையும் ஆய்வு செய்தார்.ஆய்வின் போது ஒன்றிய கவுன்சிலர் செல்வராஜ், பொதுக்குழு உறுப்பினர் செல்வராஜ் , அதிகாரிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை