மேலும் செய்திகள்
குடிக்க பணம் தராததால் வாலிபர் தற்கொலை
04-Sep-2025
விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி அருகே மாயமான முதியவர் அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். விக்கிரவாண்டி அடுத்த பனையபுரத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி, 65; கூலி தொழிலாளி. இவர் கடந்த மாதம் 25ம் தேதி மாயமானார். விக்கிரவாண்டி போலீசார் வழக்கு பதிந்து தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை பனையபுரம் அரசு பள்ளி அருகே பாலசுப்பிரமணியன் என்பவரது கரும்பு தோட்டத்தின் நடுவே அழுகிய நிலையில் சுப்ரமணியன் சடலம் கிடப்பது தெரியவந்தது. விக்கிரவாண்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அழுகிய நிலையிலிருந்த சடலத்தை பார்வையிட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத் துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வரு கின்றனர்.
04-Sep-2025