உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / காணாமல் போனவர் உடல் கிணற்றில் இருந்து மீட்பு

காணாமல் போனவர் உடல் கிணற்றில் இருந்து மீட்பு

செஞ்சி: காணாமல் போன முதியவர் கிணற்றில் இறந்து கிடந்தார்.செஞ்சி அடுத்த பரதன் தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் முனுசாமி 60: இவர் நேற்று முன்தினம் மாலையில் இருந்து காணாமல் போனார். வீட்டில் இருந்தவர்கள் பல இடங்களில் தேடி வந்த நிலையில் நேற்று காலை 9 மணியளவில் அங்குள்ள விவசாய கிணறு ஒன்றில் இறந்து கிடந்தார். தகவல் அறிந்து சத்தியமங்கலம் போலீசார், செஞ்சி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் கிணற்றில் இருந்து முனுசாமியின் உடலை மீட்டு செஞ்சி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.இது குறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ