உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / காணாமல் போன பெண் மர்ம சாவு; திருமணமான 2 மாதத்தில் பரிதாபம்

காணாமல் போன பெண் மர்ம சாவு; திருமணமான 2 மாதத்தில் பரிதாபம்

திருக்கோவிலுார் : அரகண்டநல்லுார் அருகே திருமணமான இரண்டே மாதத்தில் இளம் பெண் கிணற்றில் சடலமாக கிடந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லுார் அடுத்த சா.பில்ராம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ்பாபு, 27; இவரது மனைவி ரம்யா, 24; இரண்டு மாதங்களுக்கு முன் திருமணம் ஆனது.இந்நிலையில் கடந்த 7ம் தேதி முதல் ரம்யாவைக் காணவில்லை. இது குறித்து மாமனார் பழனி அரகண்டநல்லுார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர்.நேற்று பிற்பகல் 3:00 மணியளவில் பில்ராம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த பாண்டுரங்கன் என்பவரது விவசாயக் கிணற்றில் ரம்யா மர்மமான முறையில் இறந்து கிடந்தது தெரியவந்தது.திருக்கோவிலுார் தீயணைப்பு நிலைய அலுவலர்கள் உதவியுடன் போலீசார், உடலை மீட்டனர். இதுகுறித்து அரகண்டநல்லுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.திருமணமாகி இரண்டு மாதங்களில் மர்மமான முறையில் இறந்துள்ளதால் ஆர்.டி.ஓ., விசாரணை மேற்கொண்டு வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை