மேலும் செய்திகள்
உப்பனாறு மேம்பாட்டு பணி நேரு எம்.எல்.ஏ., ஆய்வு
25-Jul-2025
செஞ்சி : செஞ்சி 'பி' ஏரியில் 2 கோடி ரூபாய் மதிப்பில் உபரி நீர் செல்லும் பகுதியில் பாலம் கட்டும் பணியை மஸ்தான் எம்.எல்.ஏ., ஆய்வு செய்தார். செஞ்சி 'பி' ஏரியில் உபரி நீர் வெளியேறும் பகுதியை புதுப்பித்து, தண்ணீர் வெளியேறும் பகுதியில் பாலம் மற்றும் உபரி கால்வாய்களை சீரமைக்கும் பணி 2 கோடி ரூபாய் மதிப்பில் நடந்து வருகிறது. இப்பணிகளை மஸ்தான் எம்.எல்.ஏ., ஆய்வு செய்தார். திட்ட வரைபடத்தில் உள்ளதை போல் பணிகள் நடந்து வருகிறதா என பார்வையிட்டு, மழைக்காலம் துவங்கும் முன் பணிகளை விரைவாகவும், தரமாகவும் முடிக்கும்படி அறிவுறுத்தினார். ஆய்வின் போது ஒன்றிய சேர்மன் விஜயகுமார், பேரூராட்சி சேர்மன் மொக்தியார் அலி, இளநிலை பொறியாளர் சுப்ரமணி உடன் இருந்தனர்.
25-Jul-2025