உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  மாணவிகளுக்கு சைக்கிள் எம்.எல்.ஏ., வழங்கல்

 மாணவிகளுக்கு சைக்கிள் எம்.எல்.ஏ., வழங்கல்

விக்கிரவாண்டி: சிந்தாமணி அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடந்தது. விழாவிற்கு, டி.இ.ஓ., சேகர் தலைமை தாங்கினார். ஒன்றிய சேர்மன் சங்கீத அரசி ரவிதுரை, ஊராட்சி தலைவர் வாசுகி புருஷோத்தமன், துணைத் தலைவர் சுமதி பாண்டியன் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியை சுசீலா வரவேற்றார். அன்னியூர் சிவா எம்.எல்.ஏ., மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் மற்றும் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு வினா விடை தொகுப்பு புத்தகம் வழங்கி பேசினார். ஒன்றிய செயலாளர்கள் ரவிதுரை, வேம்பி ரவி, ஒன்றிய தலைவர் முரளி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் அண்ணா, தொகுதி ஒருங்கிணைப்பாளர் சுந்தர், மாவட்ட அமைப்பாளர்கள் அருள்மொழி, கணேசன், யுவராஜ், பள்ளி ஆசிரியைகள் மாணவர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ