மேலும் செய்திகள்
வயரிங் மற்றும் பைக் பழுது நீக்கும் பயிற்சி
18-Oct-2025
விழுப்புரம்: விழுப்புரம் இந்தியன் வங்கி சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில் மொபைல் போன் இலவச சர்வீஸ் பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்தியன் வங்கி சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிறுவன செய்திக்குறிப்பு: விழுப்புரம் இந்தியன் வங்கி சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில், 30 நாட்கள் மொபைல்போன் இலவச சர்வீஸ் பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த இலவச தொழில் பயிற்சிக்கு நேர்முகத் தேர்வு வரும் நவம்பர் 10ம் தேதி நடக்கிறது. பயிற்சி 14ம் தேதி துவங்குகிறது. பயிற்சிக்கான தகுதி 18 வயது முதல் 45 வயது வரை இருக்கலாம். 8ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் அதற்கும் மேல் படித்திருக்க வேண்டும். கிராமப்புறத்தை சேர்ந்தவர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் நுாறுநாள் வேலை வாய்ப்பு அட்டை இருந்தால் முன்னுரிமை வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் பயிற்சிக்கு விண்ணப்பித்து பயன்பெறலாம். ஆதார் நகல், குடும்ப அட்டை நகல், ரேஷன் அட்டை நகல், வங்கி புத்தகம் நகல், நுாறு நாள் வேலை அட்டை ஆகியவற்றை கொண்டு வந்து நேர்முக தேர்வில் பங்கேற்கலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
18-Oct-2025