உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மொபைல் போன் திருடியவர் கைது

மொபைல் போன் திருடியவர் கைது

விழுப்புரம்: விழுப்புரத்தில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் குடிநீர் கேட்பது போல் மொபைல் போன் திருடியவரை போலீசார் கைது செய்தனர் விழுப்புரம் வி.மருதுாரைச் சேர்ந்தவர் அருணாசலம் மனைவி குமாரி, 42; இவர் கடந்த 4ம் தேதி மாலை வீட்டில் தனியார் இருந்தார். அப்போது, திருக்கோவிலுார் அடுத்த சித்தம்பட்டினம் கிராமத்தை சேர்ந்த செல்வம் மகன் தங்கமணி, 50; குடிப்பதற்கு தண்ணீர் கேட்டுள்ளார். தண்ணீர் எடுக்க குமாரி வீட்டின் உள்ளே சென்றபோது, மேஜை மீது இருந்த மொபைல் போனை திருடிக்கொண்டு தங்கமணி தலைமறைவானார். புகாரின் பேரில், விழுப்புரம் டவுன் போலீசார் வழக்கு பதிந்து, அவரை தேடி வந்த நிலையில் நேற்று முன்தினம் தங்கமணியை விழுப்புரம் டவுன் போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ