மேலும் செய்திகள்
பருவமழை மீட்பு பணி மதுராந்தகத்தில் ஒத்திகை
13-Sep-2025
திருவெண்ணெய்நல்லுார்: திருவெண்ணெய்நல்லுார் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் தென்பெண்ணை எல்லீஸ் அணைக்கட்டில் ஒத்திகை நடந்தது. விழுப்புரம் மாவட்ட உதவி அலுவலர் ஜமுனா ராணி தலைமையில், திருவெண்ணெய்நல்லுார் நிலைய அலுவலர் கோபால் முன்னிலையில், தீயணைப்பு வீரர்கள் ஒத்திகையில் ஈடுபட்டனர். இதில், ஆற்று நீரில் தத்தளிப்பவரையும், தண்ணீரில் அடித்து செல்பவர்களையும் காப்பாற்றுவது, மழையினால் இடிந்த கட்டங்களின் உள்ளே சிக்கிக்கொண்டவர்களை மீட்பது உள்ளிட்ட, பல்வேறு பயிற்சிகளை மேற்கொண்டனர். தாசில்தார் செந்தில்குமார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
13-Sep-2025