உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் அ.தி.மு.க.,வில் இணைப்பு

நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் அ.தி.மு.க.,வில் இணைப்பு

திண்டிவனம் : நாம் தமிழர் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் மாஜி அமைச்சர் முன்னிலையில், அ.தி.முக.,வில் இணைந்தனர். நாம் தமிழர் கட்சியின் விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் சுகுமார்,விழுப்புரம் மத்திய மாவட்ட செயலாளர் மணிகண்டன்,விழுப்புரம் மத்திய மாவட்ட பொருளாளர் ராஜேஷ்,செஞ்சி நகர தலைவர் சதீஷ்,செஞ்சி நகர இணை செயலாளர் செந்தில்,ஒலக்கூர் ஒன்றிய செயலாளர் மோகன்ராஜ்,மயிலம் தொகுதி சுற்றுச்சூழல் பாசறை செயலாளர் சந்தோஷ் குமார் ஆகியோர், அக்கட்சியிலிருந்து விலகி, திண்டிவனத்தில் முன்னாள் அ.தி.மு.க.,அமைச்சர் சண்முகம் முன்னிலையில் நேற்று அ.தி.மு.க.,வில் இணைந்தனர்.அ.தி.மு.க.,விழுப்புரம் மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி செயலாளர் பிரித்திவிராஜ் ஏற்பாட்டில் நடந்த நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் வெங்கடேசன், அ.தி.மு.க.,நிர்வாகி குமரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி