உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / நாம் தமிழர் கட்சியின் மா.செ., ராஜினாமா

நாம் தமிழர் கட்சியின் மா.செ., ராஜினாமா

செஞ்சி:நாம் தமிழர் கட்சியின் விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலர் சுகுமார். இவர், கடந்த சட்டசபை தேர்தலில், அக்கட்சி சார்பில் செஞ்சி தொகுதியில் போட்டியிட்டு 9,920 ஓட்டுகளைப் பெற்றார். இது, பதிவான ஓட்டுகளில் 4.8 சதவீதம்.இவர் ராஜினாமா கடிதத்தை சீமானுக்கு அனுப்பியுள்ளார்.அந்த கடிதத்தில் அவர் கூறியுள்ளதாவது: இரண்டு லோக்சபா, இரண்டு சட்டசபை தேர்தல், ஒரு உள்ளாட்சி தேர்தலில் சிறப்பாக வேலை செய்தேன்.பணமோ, பொருளோ எதிர்பார்க்கவில்லை. எங்களுக்கான மரியாதை மற்றும் அங்கீகாரத்தை உங்களால் தர முடியவில்லை.ஆனால் நீங்கள், 'எவருக்கும் நான் பதில் சொல்ல முடியாது, நீங்கள் என்னிடம் கேள்வியும் கேட்கக்கூடாது.உங்களை யாரும் போஸ்டர் ஒட்டவும் சொல்லவில்லை; செலவு செய்யவும் கூறவில்லை. இருந்தால் இருங்கள், இல்லாவிட்டால் கிளம்புங்கள்' என்று கூறியதன் அடிப்படையில், நாம் தமிழர் கட்சியின் அனைத்து பொறுப்புகள் மற்றும் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் விலகுகிறேன்.இவ்வாறு கடிதத்தில் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி