உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / இடைநிலை ஆசிரியர்களுக்கு நேஷனல் அகாடமி பாராட்டு

இடைநிலை ஆசிரியர்களுக்கு நேஷனல் அகாடமி பாராட்டு

விழுப்புரம் : விழுப்புரம் நேஷனல் அகாடமியில் பயின்று போட்டி தேர்வில் வென்ற இடைநிலை ஆசிரியர்களுக்கான பாராட்டு விழா நடந்தது.தொடக்கப் பள்ளிகளில் 2,342 இடைநிலை ஆசிரியர்களை தேர்வு செய்யும் போட்டி தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள், விழுப்புரம் நேஷனல் அகாடமியில் நடந்தது. இங்கு பயின்றவர்களில் சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்து இறுதி தேர்வு பட்டியலில் 60 ஆசிரியர்கள் தேர்வாகினர்.இவர்களுக்கான பாராட்டு விழா நேஷனல் அகாடமியில் நடந்தது. நிறுவன முதல்வர் சரவணன் தலைமை தாங்கினார். நிர்வாகி செல்வகுமார், வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கினார்.பயிற்சி அளித்த ஆசிரியர்கள் ஆண்ட்ரூஸ், அரிராமன், குபேர், வீராசாமி, கவிதாஸ், மரியம் ஆண்டனி, கணிப்பொறி, இயக்குநர் சுரேஷ் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை