உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / செவிலியர் கல்லுாரியில் தேசிய மருத்துவ கருத்தரங்கு

செவிலியர் கல்லுாரியில் தேசிய மருத்துவ கருத்தரங்கு

விழுப்புரம், - மயிலம் செவிலியர் கல்லுாரியில் 3வது தேசிய அளவிலான மருத்துவ கருத்தரங்கம் நடந்தது.மணக்குள விநாயகர் மற்றும் மயிலம் சுப்ரமணிய சுவாமி கல்வி அறக்கட்டளைத் தலைவர் தனசேகரன், செயலாளர் நாராயணசாமி கேசவன், பொருளாளர் ராஜராஜன் ஆகியோர் வழிகாட்டுதலின் பேரில், கருத்தரங்கம் நடந்தது.கருத்தரங்கம் துவக்க விழாவிற்கு, கல்லுாரி முதல்வர் தமிழ்செல்வி தலைமை தாங்கினார். மயிலம் கல்வி குழுமம் இயக்குனர் செந்தில் சிறப்புரையாற்றினார். துணை முதல்வர் நர்மதா, லட்சுமி நாராயணா இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்சஸ் கல்லுாரி முதல்வர் ராஜலட்சுமி, மயிலம் பொறியியல் கல்லுாரி முதல்வர் ராஜப்பன் உட்பட பலர் பங்கேற்றனர்.கருத்தரங்க அறிக்கையை பேராசிரியர் பாரதி வழங்கினார். துணை பேராசிரியை கிரிஜா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை