உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / தெய்வானை அம்மாள் கல்லுாரியில் தேசிய அளவிலான கருத்தரங்கம்

தெய்வானை அம்மாள் கல்லுாரியில் தேசிய அளவிலான கருத்தரங்கம்

விழுப்புரம்: விழுப்புரம், தெய்வானை அம்மாள் மகளிர் கல்லுாரியில், தேசிய அளவிலான கருத்தரங்கம் நடைபெற்றது.கல்லுாரி முதல்வர் அகிலா தலைமை தாங்கினார். ஆராய்ச்சி புல முதன்மையர் கலைமதி, விளக்கவுரை ஆற்றினார். வணிக நிர்வாகவியல் துறைத்தலைவர் வாசுகி வரவேற்றார். பெங்களூரூ மவுண்ட் கார்மல் கல்லுாரி வணிக நிர்வாகவியல் இணைப்பேராசிரியர் ராஜ்குமார், 'தலைமைத்துவ மேம்பாட்டிற்கான முதன்மைகருவி இலக்கியம்' என்கிற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.சென்னை புதுக்கல்லுாரி முதுகலை மற்றும் ஆங்கில ஆராய்ச்சித்துறையின்இணைப்பேராசிரியர் நரேஷ், ' கதைகூறும் முறையின் வடிவமைப்பும், பார்வையும்' என்கிற தலைப்பில் உரையாற்றினார். ஆங்கிலத்துறைத் தலைவர் சரண்யா நன்றி கூறினார். இதில், பல்வேறு கல்லுாரிகளைச் சார்ந்த முனைவர் பட்ட ஆய்வாளர்கள் மற்றும் மாணவியர்கள் தங்களது ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்தனர். கருத்தரங்கில் பங்கேற்ற மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை