| ADDED : ஜன 22, 2024 12:10 AM
திண்டிவனம் : திந்திரிணீஸ்வரர் கோவிலில் குடமுழுக்கின்போது, 63 நாயன்மார்களின் சிலைகளை பிரதிஷ்டை செய்ய வேண்டும் என இந்து முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது.திண்டிவனத்தில் சோழமன்னர்களால் 1000 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட மரகதாம்பிகை உடனுறை திந்திரிணீஸ்வரர் கோவில் புதிய முறையில் புனரமைக்கப்பட்டு, திருப்பணி மற்றும் குடமுழுக்கு நடைபெற உள்ளது.இது தொடர்பான ஆலோசனை மற்றும் கருத்து கேட்புக் கூட்டம் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நடந்தது.இதில் பங்கேற்ற இந்து முன்னணி மாவட்ட செயலாளர் பிரபு மற்றும் நிர்வாகிகள், கோவில் செயல் அலுவலர் சூரியநாரயணனிடம் கொடுத்துள்ள கோரிக்கை மனுவில், 'குடமுழுக்கு நடைபெறும் சமயத்தில், கோவிலில் 63 நாயன்மார்களின் சிலைகள் பிரதிஷ்டை செய்ய வேண்டும்' என தெரிவித்துள்ளனர்.