உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / நெட் ஒர்க்கர்ஸ் வெல்பேர் அசோசியேசன் செயற்குழு

நெட் ஒர்க்கர்ஸ் வெல்பேர் அசோசியேசன் செயற்குழு

விழுப்புரம் : விழுப்புரத்தில் நெட் ஒர்க்கர்ஸ் வெல்பேர் அசோசியேசன் செயற்குழு கூட்டம் நடந்தது. சங்க தலைவர் மனோகரன் தலைமை தாங்கினார். அகில இந்திய துணைத் தலைவர்கள் பிரபாகரன், தமிழ்செல்வன், உத யா முன்னிலை வகித்தனர். இதில் மோசடி நிதி நிறுவனங்களிடம் ஏமாந்த மக்கள் இழந்த பணத்தை மீட்கவும், போலி நிதி நிறுவனங்களை ஒழித்து, தொழிலுக்கு பாதுகாப்பு ஏற்படும் வகையில் ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் ஆணையம் அமைத்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறி தேர்தல் அறிக்கை வெளியிடும் கட்சிக்கு வரும் சட்டசபை தேர்தலில் ஆதரவு அளிப்பது; நேரடி விற்பனை என்ற எங்கள் தொழிலுக்கு கேரள அரசை போன்று தமிழகத்திலும் அங்கீகாரம், பாதுகாப்பு வழங்கும் சட்டம் இயற்றும் கட்சிக்கு ஆதரவு அளிப்பது; எம்.எல்.எம்., இண்டஸ்ட்ரியை அங்கீகரிக்கவும், தனி அமைச்சகம், தனி வாரியம் அமைத்து நலத்திட்ட உதவிகளை வழங்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்; என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அப்போது, புதுச்சேரி மாநில தலைவர் பழனிவேல், அகில இந்திய துணைச்செயலாளர் மோகன்ராஜ், சதிஷ்குமார் தென்னிந்திய இணை செயலாளர் துளசிங்கம், புவ னேஸ்வரன், மாவட்ட துணை தலைவர் வைத்தீஸ்வரன், அறிவழகன், இளைஞரணி துணை தலைவர் ராம்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி