உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / புதிய ரேஷன் கடை முன்னாள் அமைச்சர் திறந்து வைப்பு

புதிய ரேஷன் கடை முன்னாள் அமைச்சர் திறந்து வைப்பு

செஞ்சி : கணக்கன்குப்பம் ஊராட்சியில் புதிய ரேஷன் கடையை எம்.எல்.ஏ., மஸ்தான் திறந்து வைத்தார். செஞ்சி ஒன்றியம் கணக்கன்குப்பம் ஊராட்சியில் எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.13.16 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய ரேஷன் கடை திறப்பு விழா நடந்தது. ஒன்றிய சேர்மன் விஜயகுமார் தலைமை தாங்கினார். ஊராட்சி துணை சேர்மன் ஜெயபாலன், மாவட்ட கவுன்சிலர் அரங்க ஏழுமலை முன்னிலை வகித்தனர். ஊராட்சி தலைவர் சுலோச்சனா ஜெயபால் வரவேற்றார். முன்னாள் அமைச்சர் மஸ்தான் புதிய கட்டடத்தை திறந்து வைத்து பொது மக்களுக்கு ரேஷன் பொருள் வினியோகத்தை துவக்கி வைத்தார்.ஒன்றிய கவுன்சிலர் கேமல், பாடிப்பாள்ளம் ஊராட்சி தலைவர் தாட்சாயணி, ஒன்றிய செயலாளர்கள் விஜயராகவன், பச்சையப்பன் மற்றும் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி