| ADDED : ஜன 04, 2024 03:33 AM
விழுப்புரம்: விழுப்புரம் அருகே நடுரோட்டில் புத்தாண்டு கொண்டாடியதை தட்டி கேட்ட கல்லுாரி மாணவருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர்கள் மீது போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர்.விழுப்புரம் அடுத்த ஆலாத்துார் கிராமத்தைச் சேர்ந்த முருகன் மகன் பலராமன், 20; இவர், விழுப்புரம் அரசு கல்லுாரியில் 2ம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில், கடந்த 31ம் தேதி இரவு விராட்டிக்குப்பம் பகுதியை சேர்ந்த ராகுல் மற்றும் அவரது நண்பர்கள், நடுரோட்டில் புத்தாண்டை கேக் வெட்டி கொண்டாடி உள்ளனர். அப்போது, அந்த வழியாக வந்த பலராமன், வழிவிடுமாறு கேட்டதில், அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.இந்நிலையில், கடந்த 2ம் தேதி கல்லுாரிக்கு சென்ற பலராமனை, ராகுல் மற்றும் அவரது நண்பர்கள் திட்டி கொலை மிரட்டல் விடுத்தனர்.பலராமன் கொடுத்த புகாரின் பேரில், விழுப்புரம் டவுன் போலீசார், ராகுல் மற்றும் அவரது நண்பர்கள் மீது வழக்கு பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.