மா.கம்யூ., அலுவலகத்தில் நவம்பர் புரட்சி தினம்
விழுப்புரம்: விழுப்புரம் மா.கம்யூ., கட்சி மாவட்ட அலுவலகத்தில், 108வது நவம்பர் புரட்சி தின நிகழ்ச்சி நடந்தது. நகர செயலாளர் முருகன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சுப்ரமணியன் செங்கொடியை ஏற்றி வைத்து, வீர வணக்கம் செலுத்தினார். மாவட்ட குழு உறுப்பினர் வீரமணி, சி.ஐ.டி.யூ.,மாவட்ட நிர்வாகிகள் ரகோத்தமன், மாணிக்கம், மூர்த்தி, மேகநாதன், சகாதேவன், ராமமூர்த்தி, கருணாநிதி, இடைக்குழு உறுப்பினர் நிலா உட்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.