உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / அரசு அலுவலர்களுக்கான ஆட்சி மொழி பயிலரங்கம்

அரசு அலுவலர்களுக்கான ஆட்சி மொழி பயிலரங்கம்

விழுப்புரம்: விழுப்புரத்தில் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் ஆட்சி மொழி பயிலரங்கம் நடந்தது.விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, கூடுதல் கலெக்டர் ஸ்ருதன் ஜெய்நாராயணன் தலைமை தாங்கி தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் சித்ரா வரவேற்றார்.இப்பயிலரங்கில், மாவட்டம் முழுவதுமிருந்து, பல்வேறு துறைகளை சேர்ந்த அரசுப் பணியாளர்கள், அலுவலர்கள் பங்கேற்றனர். அவர்களுக்கு ஆட்சி மொழி குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது.அரசு துறைகளைச் சேர்ந்த அலுவலர்கள் குணசேகர், நாராயணன், சுசான்மரி நெப்போலியன், கதிரிளவன் ரவிக்குமார், தம்புசாமி, அசோகன் ஆகியோர் பயிற்சி அளித்தனர். பயிலரங்கின் நிறைவு கருத்தரங்கில் எழுத்தாளர் செங்குட்டுவன் கருத்துரையாற்றினார்.தமிழ் வளர்ச்சித்துறை முன்னாள் துணை இயக்குனர் சிவசாமி, பி.டி.ஓ., சிவக்குமார், கருத்துரை வழங்கினார். பயிலரங்கில் பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ