உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பைபாசில் 3 வாகனங்கள் மோதல் ஒருவர் பலி ; 13 பேர் படுகாயம்

பைபாசில் 3 வாகனங்கள் மோதல் ஒருவர் பலி ; 13 பேர் படுகாயம்

விழுப்புரம்: திருவெண்ணெய்நல்லுார் அருகே பைபாஸ் சாலையில் 3 வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில், ஒருவர் உயிரிழந்தார்; 13 பேர் படுகாயம் அடைந்தனர். புதுக்கோட்டை மாவட்டம், வானக்கன்காடு கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ் மனைவி பிரியங்கா,30; இவரது பிள்ளைகள் கவின், 2; கவின் நாயகி; 2, மற்றும் அதே கிராமத்தை சேர்ந்த உறவினர், முருகேசன் 56; உள்ளிட்ட, 9 பேர், சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்று நேற்று இனோவா காரில், ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். திருவெண்ணெய்நல்லுார் அருகே இருவேல்பட்டு பைபாஸ் சாலையில் அதிகாலை 4:00 மணிக்கு வந்த போது, பின்னால் வந்த சுற்றுலா வேன் கார் மீது மோதியது. இதனால் கார், முன்னால் சென்ற லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், காரில் பயணித்த முருகேசன் சம்பவ இடத்திலேயே இறந்தார். காரில் பயணித்த 8 பேர், வேனில் வந்த 5 பேர் படுகாயமடைந்தனர். இவர்களை திருவெண்ணெய்நல்லுார் போலீசார் மீட்டு, சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை