மேலும் செய்திகள்
முன்னால் சென்ற டிராக்டரில் பைக் மோதி பெண் பலி
05-Dec-2024
வானுார்: வானுார் அருகே பைக் மோதிய விபத்தில் காயமடைந்து சிகிச்சையில் இருந்தவர் உயிரிழந்தார்.வானுார் அடுத்த சின்ன காட்ராம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் அருள், 45; இவர் கடந்த 30ம் தேதி இரவு 8;30 மணிக்கு காட்ராம்பாக்கத்தில் இருந்து புதுச்சேரி-திண்டிவனம் பைபாஸ் சாலை வழியாக திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டிற்கு, ஸ்கூட்டியில் சென்று கொண்டிருந்தார். புள்ளிச்சப்பள்ளம் கிராமத்தை கடந்த போது, பின்பக்கமாக வந்த அடையாளம் தெரியாத ராயல் என்பீல்டு பைக், அருள் ஓட்டிச் சென்ற ஸ்கூட்டி மீது மோதியது.இதில் படுகாயமடைந்த அருளை அருகில் இருந்தவர்கள் மீட்டு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்தனர். நேற்று முன்தினம் அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். வானுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
05-Dec-2024