உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கார் மோதி ஒருவர் பலி

கார் மோதி ஒருவர் பலி

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி அடுத்த பாதிராபுலியூரைச் சேர்ந்தவர் லட்சுமணன், 30; சலவை தொழிலாளி. இவர், நேற்று மாலை 3:30 மணியளவில் தனது டி.வி.எஸ்., பைக்கில் விழுப்புரம் நோக்கி வந்தார். பேரணி சங்கராபரணி ஆற்றுப்பாலத்தில் வந்த போது, பின்னால் சென்னையிலிருந்து விழுப்புரம் நோக்கி வேகமாக சென்ற கார் பைக் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இந்த விபத்தில், லட்சுமணன் சம்வ இடத்திலேயே இறந்தார். விக்கிரவாண்டி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை