| ADDED : பிப் 04, 2024 04:07 AM
செஞ்சி : செஞ்சி ஒன்றியத்தில் 24.55 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட 3 ரேஷன் கடைகள் திறப்பு விழா நடந்தது.செஞ்சி ஒன்றியத்தில் எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து சோமசமுத்திரத்தில் 7 லட்சம் ரூபாய், சென்னாலுாரில் 5.25 லட்சம் ரூபாய், மாட்டம்பாடி ஊராட்சியில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் 12.30 லட்சம் ரூபாய் மதிப்பில் 3 ரேஷன் கடைகள் கட்டப்பட்டன.இதன் திறப்பு விழாவிற்கு, ஒன்றிய சேர்மன் விஜயகுமார் தலைமை தாங்கினார். துணைச் சேர்மன் ஜெயபாலன், மாவட்ட கவுன்சிலர் ஏழுமலை முன்னிலை வகித்தனர். ஊராட்சி தலைவர்கள் பிருந்தா, தாட்சாயணி, கீதா வரவேற்றனர்.அமைச்சர் மஸ்தான் புதிய கடைகளை திறந்து வைத்து, ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொருட்களை வழங்கி பேசினார்.நிகழ்ச்சியில், பி.டி.ஓ.,க்கள் சீத்தாலட்சுமி, வெங்கடசுப்ரமணியன், கூட்டுறவு சார் பதிவாளர்கள் ரூபன் கென்னடி, கண்ணன், ஒன்றிய சேர்மன் விஜயராகவன், அவைத் தலைவர் ஆறுமுகம், பொருளாளர் இக்பால், மாவட்ட பிரதிநிதி அய்யாதுரை, முன்னாள் ஊராட்சி தலைவர் பழனி, தி.மு.க., நிர்வாகிகள் பங்கேற்றனர்.கூட்டுறவு சங்க செயலாளர்கள் பழனி, கார்த்திகேயன் நன்றி கூறினர்.