உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கோலியனுாரில் 6 வீடுகள் திறப்பு

கோலியனுாரில் 6 வீடுகள் திறப்பு

விழுப்புரம்: பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் கோலியனுார் ஒன்றியத்தில் கட்டி முடிக்கப்பட்ட 6 வீடுகள் திறப்பு விழா நேற்று நடந்தது.விழுப்புரம் மாவட்டத்தில், பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ், மத்திய அரசின் பங்களிப்பாக ரூ.2.70 லட்சம் நிதி வழங்கப்பட்டு, வீடு கட்டும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இத்திட்டத்தின் கீழ் கோலியனூர் ஒன்றியத்தில் பனங்குப்பம், சாலையாம்பாளையம், கோலியனூர் ஆகிய ஊராட்சிகளில் 6 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு, பயனாளிகளிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. விழுப்புரம் எம்.எல்.ஏ., லட்சுமணன் புதிய வீடுகளை திறந்து வைத்து குத்துவிளக்கேற்றி வைத்தார்.நிகழ்ச்சியில் கோலியனூர் ஒன்றிய சேர்மன் சச்சிதாநந்தம், தி.மு.க., ஒன்றிய செயலாளர் தெய்வசிகாமணி, பி.டி.ஓ.,க்கள் ராஜவேல், முருகன், கவுன்சிலர் மணவாளன் கலந்து கொண்டனர்..


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை